பொது செய்தி

தமிழ்நாடு

சொன்னா கேளுங்க!கொரோனா' கட்டுப்படும் வரை... ஊரடங்கு உத்தரவை பின்பற்றணும்

Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பொள்ளாச்சி:'கொரோனா' வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி, இன்று ஒரு நாள் வெளியே சுற்றாமல், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.வாகனங்களில் கிருமி நாசினி தெளித்தல், பொதுமக்களிடம் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.வருவாய்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கேரளா மாநில எல்லையிலுள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன. கேரளா மாநில பஸ்கள், வாகனங்கள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி எல்லையில் உள்ள, கோபாலபுரம், நடுப்புணி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.போலீஸ், கால்நடைத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, கண்காணிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர்.சோதனைச்சாவடியில் வாகன அனுமதிக்கான அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அதில், 'அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் (பால், உணவுப்பொருட்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள், சமையல் காஸ் சிலிண்டர், கோழி, முட்டை ஆகியவை), ஆம்புலன்ஸ், சரக்கு, அரசு அலுவலர் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.தனியார் வாகனங்கள், வாடகை மற்றும் சுற்றுலா வாகனங்கள், இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் தடை செய்யப்பட்டுள்ளன.தவிர்க்க இயலாத காரணங்களான, இறப்பு போன்ற காரணங்களுக்காக இலகுரக வாகனங்கள் உரிய ஆய்வுக்கு பின் சிறப்பினமாக கருதி அனுமதிக்கப்படும்.இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்,' என, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எல்லையில் நிறுத்தம்!இருமாநில எல்லை சோதனைச்சாவடிகளில் அந்தந்த மாநில பஸ்கள் நிறுத்தம் செய்யப்படுகிறது. பயணிகள் இறங்கி நடந்து சென்று பஸ் ஏறுகின்றனர். பயணிகள் உரிய பரிசோதனை செய்த பின் அனுமதிக்கப்படுவதாக டாக்டர்கள், போலீசார் தெரிவித்தனர்.மேலும், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்பவர்களிடமும்; கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களிடம், 'மீண்டும் அனுமதிக்கமாட்டோம்; கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' என போலீசார் தெரிவித்து அனுப்புகின்றனர்.எல்லையிலுள்ள சோதனைச்சாவடிகளில் மேற்கொண்டுள்ள பணிகளை, மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா, டி.ஐ.ஜி., கார்த்திகேயன், எஸ்.பி., சுஜித்குமார் ஆய்வு செய்து, அறிவுறுத்தினர்.பஸ் ஸ்டாண்ட் வெறிச்பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில் கேரளா மாநில பஸ்கள் நிறுத்தப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. திருச்சூர் பெயர் பலகையுடன் இயக்கப்பட்ட தனியார் பஸ் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து, அந்த பஸ், எல்லை பகுதியில் நிறுத்தம் செய்ய நடவடிக் கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மார்-202012:32:30 IST Report Abuse
Ram Pollachi கொரோனாவை கூட கட்டுப்படுத்திடலாம் ஆனால் நம் மக்களுக்கு புரிய வைத்து ஒரு இடத்தில் இருக்க வைப்பது சிரமம். கேரள மக்கள் கார், இருசக்கர வாகனத்தில் கூட்டமாக ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, இன்ப சுற்றுலாவுக்கு வருவதால் இந்த தடை மற்றபடி குறைந்த அளவில் சரக்கு வண்டிகள் உரிய பாதுகாப்புடன் எல்லையை கடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X