பொது செய்தி

தமிழ்நாடு

பணியாளர்கள் தன் சுத்தம் பேண சப்-கலெக்டர் அறிவுறுத்தல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி; 'உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறும் பணியாளர்கள் தன்சுத்தம் பேண வேண்டும்,' என விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி.,க்கள் சிவக்குமார், விவேகானந்தன், தாசில்தார்கள் தணிகைவேல், வெங்கடாச்சலம், ஸ்ரீதேவி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், அரசு பல்வேறு துறை அதிகாரிகள், மருந்துக்கடை உரிமையாளர்கள், ஓட்டல், தனியார் பஸ், வர்த்தக சபை நிர்வாகிகள் பங்கேற்றனர்.சப் - கலெக்டர் பேசியதாவது:கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ், போஸ்டர்கள் வைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கைகழுவும் இடத்தில் சோப்பு, ேஹண்ட் சானிடைசர் வைக்க வேண்டும். உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறும் பணியாளர்கள் தன் சுத்தம் பேண வேண்டும். இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் உள்ள பணியாளர்கள் பணியமர்த்த கூடாது.உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை தனி இருப்பு அறையில் வைத்து பதிவேடு கொண்டு பராமரிக்க வேண்டும்.உணவு வகைகள் நன்கு வேக வைத்தும், மூடி வைத்தும் பாதுகாப்பாக வழங்க வேண்டும். உணவுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள் சுத்தமான நீரில் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.தரையை மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.டேபிள் மற்றும் சேர் போன்றவற்றையும் உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு குடிக்க வெந்நீர் வழங்க வேண்டும்.மருந்துக்கடைகளில், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வழங்க கூடாது. முகக்கவசம் அதிக விலைக்கு விற்க கூடாது. 'ஹேண்ட் சானிடைசர்' கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, சப் - கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X