கொரோனா பாதிப்புக்கு ஆழியாறில் சிறப்பு தவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பாதிப்புக்கு ஆழியாறில் சிறப்பு தவம்

Added : மார் 22, 2020
Share

ஆனைமலை:'கொரோனா' பாதிப்புக்கு உள்ளானவர்கள் விரைவில் குணமாக, ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில், சிறப்பு தவம் நிகழ்ச்சி நடந்தது.ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் நேற்று, உலகெங்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் பெற வேண்டி, சிறப்பு தவம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் மயிலானந்தன் தலைமையில், அறிவுத்திருக்கோவிலில் பணிபுரிவோர் தவம் செய்தனர்.அதன்பின், பணியாளர்கள், யோகா பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, கொரோனா பரவும் முறை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் மயிலானந்தன் பேசுகையில், ''மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும், 31ம் தேதி வரையில், தவமையங்கள், அறிவுத்திருக்கோவில்கள், அறக்கட்டளைகளில், நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X