கொரோனா பரவுவதை தடுக்க காய்கறி மார்க்கெட் அடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவுவதை தடுக்க காய்கறி மார்க்கெட் அடைப்பு

Added : மார் 22, 2020
Share
பொள்ளாச்சி, கிணத்துக்கடவில், காய்கறி மார்க்கெட் இன்று செயல்படாது என்பதால், நேற்று காய்கறிகள் வரத்து குறைவாக இருந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று நாடு முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.இதனால், மக்களும் காலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இதனால், பொள்ளாச்சி மொத்த காய்கறி

பொள்ளாச்சி, கிணத்துக்கடவில், காய்கறி மார்க்கெட் இன்று செயல்படாது என்பதால், நேற்று காய்கறிகள் வரத்து குறைவாக இருந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று நாடு முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.இதனால், மக்களும் காலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இதனால், பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளும் காய்கறிகளை ஏலத்துக்கு கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், 'இன்று கடைகள் அடைக்கப்படுவதால், முன்கூட்டியே காய்கறி உற்பத்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டோம், இதனால், நேற்றைய ஏலத்துக்கும் மிகக்குறைந்த அளவே காய்கறிகள் வரத்து இருந்தது. தேவை அதிகம் இருந்ததால், போட்டி காரணமாக விலையும் சற்று கூடுதலாக இருந்தது,' என்றனர்.* நெகமம் வாரச்சந்தை செவ்வாய்கிழமைகளில் கூடுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வரும், 24ம் தேதியும், அடுத்த வாரம், 31ம் தேதியும் சந்தை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.* கிணத்துக்கடவில், சனிக்கிழமையன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நேற்று வாரச்சந்தை நடைபெறவில்லை. - நிருபர் குழு -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X