பொது செய்தி

தமிழ்நாடு

'குடி'மகன்களை ஒழுங்குபடுத்த 'டாஸ்மாக்' கடையில் கட்டுப்பாடு

Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, டாஸ்மாக் கடையில், 1 மீட்டர் இடைவெளியில், கோடு வரையப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் பார்கள், மார்ச், 31ம் தேதி வரை மூட, அரசு உத்தரவிட்டது; டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை.இதனால், டாஸ்மாக் கடைகளில் அதிகரித்தது. மேலும், மக்கள் ஊரடங்கு உத்தரவையடுத்து, இன்று விடுமுறை என்பதால், நேற்று டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பல்வேறு முயற்சிகள் மேற்கெள்ளப்பட்டுள்ளன.இதில், கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பிரதான சாலை, கார்ப்பரேஷன் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள, 'டாஸ்மாக்' கடைகளில், 1 மீட்டர்அகலத்திற்கு வெள்ளை சுண்ணாம்பில் கோடு போடப்பட்டுள்ளது.இதனால், மது வாங்க வரும் நபர்களுக்கு இடையே, கணிசமான இடைவெளி இருக்கும். 'குடி'மகன்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க முடியும்.
இது குறித்து, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கிர்லோஷ் குமார் கூறியதாவது:டாஸ்மாக் கடைகளில், 1 மீட்டர் இடைவெளியில் கோடு போடப்பட்டுள்ளது. மக்கள் குறிப்பிட்ட இடைவெளியில், வரிசையில் நின்று, மது வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.டாஸ்மாக் ஊழியர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்களிடம்இருந்து, குறிப்பிட்ட இடைவெளியில் நின்று மது பாட்டில்களை கொடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மார்-202007:16:12 IST Report Abuse
RAMADASS subramani மாலை நேரங்களில் இம்முறை பின்பற்றுவது கிடையாது முண்டியடித்துக்கொண்டு வாங்குகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X