பொது செய்தி

இந்தியா

அன்னிய செலாவணி இருப்பு முதன்முறையாக சரிவு

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

மும்பை : நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, ஆறு மாத தொடர் உயர்வு சாதனைக்குப் பின், முதன்முறையாக சரிவைக் கண்டு உள்ளது.



latest tamil news



மார்ச், 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 48 ஆயிரத்து, 189 கோடி டாலராக சரிந்தது. இது, இந்திய மதிப்பில், 36.14 லட்சம் கோடி ரூபாய். இதற்கு முன், இருப்பு, அதிகபட்சமாக, 48 ஆயிரத்து, 723 கோடி டாலராக இருந்தது. தற்போது குறைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக, தொடர்ந்து, அன்னிய செலாவணி இருப்பு, புதிய உச்சத்தை தொட்டு வந்தது. ஆனால், மார்ச், 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், முதல் முறையாக சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 535 கோடி டாலர் சரிவைக் கண்டது.


latest tamil news



மார்ச், 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அதிகபட்சமாக, 48 ஆயிரத்து, 723 கோடி டாலராக இருந்தது.இதற்கு முன், கடந்த ஆண்டு, செப்., 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சரிவு ஏற்பட்டது. அப்போது, அதற்கு முந்தைய வார இருப்பான, 42 ஆயிரத்து, 858 கோடி டாலர் என்பதிலிருந்து, 38.8 கோடி டாலர் சரிந்தது.தற்போதைய சரிவுக்கு, வெளிநாட்டு பணத்தின் மதிப்பு குறைந்தது காரணமாக அமைந்தது. வெளிநாட்டு பண மதிப்பானது, 378 கோடி டாலர் குறைந்து, 44 ஆயிரத்து, 736 கோடி டாலராக சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்திய ரூபாய், இதுவரை காணாத வகையில், 1 டாலருக்கு, 75.20 ரூபாய் என மதிப்பு குறைந்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



மேலும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய மூலதன சந்தைகளிலிருந்து, கடந்த வியாழனன்று மட்டும், 4,623 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.மேலும், மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் இருப்பும் குறைந்தது. தங்கத்தின் இருப்பு மதிப்பு, 153 கோடி டாலர் குறைந்து, 2,947 கோடி டாலராக சரிந்தது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 2.21 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-மார்-202020:21:34 IST Report Abuse
ஆரூர் ரங் 2014இல் மன்மோகன் ஊழலாட்சி விரட்டப்பட்டபோது அந்நியச்செலாவணி கையிருப்பு $304.2 பில்லியன் டாலர் இப்போ சரிவுக்குப்பின்னரும் 482 பில்லியன் டாலர் ஆனா இதுக்கு நிச்சயம் நேரு இந்திரா சனியா காரணமில்லை
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
22-மார்-202019:50:33 IST Report Abuse
Rajavel மோடி ஆட்சியில் எல்லாமே சரிவு தான்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-மார்-202019:40:03 IST Report Abuse
Bhaskaran எல்லாம் நிர்மலா அம்மையார் உபாயம் போலும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X