மதுரையில் 24 திருமணங்கள் ஒத்திவைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 24 திருமணங்கள் ஒத்திவைப்பு

Added : மார் 22, 2020
Share
மதுரை : மதுரையில் பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு வேண்டுகோளை முன்னிட்டு 24 திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இன்று (மார்ச் 22) காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சுயஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இன்று முகூர்த்த நாள் என்பதால் பல திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.பிரதமர் மோடியின் வேண்டு கோளை

மதுரை : மதுரையில் பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு வேண்டுகோளை முன்னிட்டு 24 திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இன்று (மார்ச் 22) காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சுயஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இன்று முகூர்த்த நாள் என்பதால் பல திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.பிரதமர் மோடியின் வேண்டு கோளை ஏற்று நாளை நடக்க விருந்த 24 திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கோயில்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் மற்றும் பாண்டி கோயிலை சுற்றியுள்ள 160 திருமண மண்டபங்களில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X