பொது செய்தி

தமிழ்நாடு

420 ஊராட்சிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Added : மார் 22, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகளில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையில் ஊராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஊரக பகுதிகளில் கொரோனாவை தடுக்க கலெக்டர் வினய் உத்தரவுபடி, கூடுதல் கலெக்டர் பிரியங்கா மேற்பார்வையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 420 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை கூறியதாவது: பொதுமக்கள் வந்து செல்லும் இடங்கள், பொது கட்டடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதற்காக அனைத்து ஊராட்சிகளுக்கும் தலா இரு பிளிச்சிங் பவுடர் மூடை வழங்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதலாக வழங்கப்படும்.

56 ஆட்டோக்கள், ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் 1946 கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 1.5 லட்சம் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்படுகிறது. ஊரக பகுதிகளில் செயல்பட்ட சந்தைகள் மூடப்பட்டுள்ளன. நடக்க இருந்த விழாக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியூர் பயணங்களை தவிர்க்கும்படி மகளிர் குழு உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர். உள்ளாட்சிகளில் அத்தியாவசிய பணிகள் தவிர பிற பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X