சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு களப்பணி பள்ளிகளுக்கு எச்சரிக்கை

Added : மார் 22, 2020
Share
Advertisement
மதுரை : 'மதுரையில் மார்ச் 31 வரை மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆசிரியர்களுக்கு களப் பணி வழங்க கூடாது' என அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 31 வரை பள்ளி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆசிரியர்கள் களப்பணியாற்ற கூடாது

மதுரை : 'மதுரையில் மார்ச் 31 வரை மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆசிரியர்களுக்கு களப் பணி வழங்க கூடாது' என அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 31 வரை பள்ளி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆசிரியர்கள் களப்பணியாற்ற கூடாது போன்ற உத்தரவுகள் நடைமுறையில் உள்ளன.இந்நிலையில் சில மெட்ரிக் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு, ஆசிரியர் களப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கலெக்டருக்கு புகார் சென்றது. விசாரணை நடத்த கலெக்டர் உத்தர விட்டார்.

விசாரணையில் சில பள்ளிகள் களப்பணி மேற் கொண்டது தெரிந்தது. 'மீண்டும் விதிமீறினால் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்படும்' என அதிகாரிகள் எச்சரித்தனர். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக் கும் சி.இ.ஓ., சுவாமிநாதன் அனுப்பிய சுற்றறிக்கையில், 'அரசு உத்தரவை அனைத்து பள்ளிகளும் புகாரின்றி பின்பற்ற வேண்டும். மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X