அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கி வளாகத்தில் ரூ.5.39 கோடியில் புதிய கட்டடம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் ரூ.5.39 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் நடந்த கூட்டுறவுத் துறை மானி கோரிக்கையில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதன்படி 108 ஆண்டுகள் பழமையான இவ்வங்கி தலைமையக கட்டடம் புதிதாக கட்டப்படவுள்ளது. வங்கி தலைவர் பாண்டியன் கூறியதாவது: மதுரை, தேனி மாவட்டங்களில் 44 கிளைகளை கொண்ட இவ்வங்கியில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்தாண்டு ரூ.5 கோடி லாபம் ஈட்டியது. இந்தாண்டு ரூ.10 கோடி லாபம் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்டடம் வணிக வங்கிகளுக்கு இணையாக நவீன தரத்தில் குளிரூட்டப்பட்ட முறையில் இந்தாண்டு டிச.,க்குள் கட்டி முடிக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X