தமிழ்நாடு

300 டன்! ஒரே நாளில் காய்கறி விற்பனை ...இன்று சுய ஊரடங்கு என்பதால்...

Added : மார் 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
காய்கறி, மாட்டுத்தாவணி,  விற்பனை, ஊரடங்கு, வியாபாரம்

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒரே நாளில் 300 டன் காய்கறி விற்றுத்தீர்ந்தது. ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் தங்களை தனிமைப்படுத்துவது அவசியம். இதற்கு சோதனை ஓட்டமாக இன்று மக்கள் சுய ஊரடங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து தரப்பிலும் இதற்கு ஆதரவு கிடைத்துள்ளது. 'மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் இன்று மூடப்படும்' என வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.

இதனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் திரண்டது. 'சில வாரங்களுக்கு வெளியில் வர வேண்டாம்'என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அதுவரை தேவைப்படும் காய்கறிகளை வாங்க குவிந்தனர். எளிதில் கெடாத காய்கறிகள் விற்பனை அமோகமாக இருந்தது. வழக்கத்தை விட இருமடங்கு வியாபாரம் நடந்தது. விலை ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்தது. கிலோ ரூ.15க்கு விற்ற தக்காளி ரூ.20க்கும், ரூ.7 க்கு விற்ற கத்தரி ரூ.20க்கும், ரூ.15க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.30க்கும், ரூ.40க்கு விற்ற சின்ன வெங்காயம் ரூ.55க்கும் விற்றது.

மக்கள் கூறுகையில், 'சில வாரங்களுக்கான காய்கறிகளை வாங்கியுள்ளோம். இனி வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டிய தேவை இருக்காது. அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்போம்' என்றனர். வியாபாரிகள் கூறுகையில், 'ஒரே நாளில் 300 டன் காய்கறிகள் விற்றுள்ளது. வழக்கமாக ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடக்கும். ஒரே சமயத்தில் மக்கள் குவிந்ததால், ரூ.5 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மார்-202018:23:40 IST Report Abuse
Ram Pollachi பலசரக்கு கடையில் வந்த கூட்டத்தை பார்த்து பலர் அதிர்ந்து விட்டார்கள். பழைய இருப்பு அம்புட்டும் காசாக்கிவிட்டார். பலகாரம், பொரிகடலை, இறைச்சி கடை என்று எதையும் விட்டுவைக்கவில்லை. உகாதி, சித்திரைக் கனியை நினைத்தா இந்த முற்றுகை.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-மார்-202005:09:32 IST Report Abuse
J.V. Iyer மக்கள் காய்கறிகள் நிறைய சாப்பிடுவது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். இதனால் விவசாயிகளும் பயன் அடைவார்கள். விவசாயிகள் பொருளாதாரம் முன்னேறினால், நாடு முன்னேறும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X