சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு உத்தரவை மீறும் ரயில்வே போர்டு

Added : மார் 22, 2020
Share
Advertisement

மதுரை : மத்திய அரசு உத்தரவை மீறும் ரயில்வே போர்டை கண்டித்து மதுரை ரயில் ஸ்டேஷன் முன் ரயில் ஓட்டுநர்கள் மற்றும் காப்பாளர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் கோட்ட செயலாளர் அழகுராஜா தலைமை வகித்தார். தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் பேசியதாவது:
மதுரை கோட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. 450க்கும் மேற்பட்டோர் ஓட்டுனர்கள், காப்பாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பணி துவங்கும்முன் பயோமெட்ரிக் வருகை பதிவு செய்து, மது அருந்தியுள்ளனரா என 'ப்ரீத் அனலைசர்' மூலம் ஊதிக்காட்டி உறுதி செய்ய வேண்டும்.

தற்போது கொரோனா பாதிப்பால் இம்முறையை ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் ரயில்வே போர்டு இதை கட்டாயப்படுத்துகிறது. இதை ரத்து செய்து ஊழியர்கள் பாதுகாப்பை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றார். உதவி கிளை செயலாளர்கள் பேச்சிமுத்து, நாகராஜ் பாபு, கார்த்திக், கருப்பையா, அருள், வேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X