சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு ஆலை விபத்து: பலி 9 ஆக உயர்வு

Added : மார் 22, 2020
Share
Advertisement

சாத்துார் : சாத்துார் சிப்பிபாறை பட்டாசு ஆலைவிபத்தில் மேலும் ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் சிப்பி பாறையில் உள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலையை குத்தகைக்கு விட்டுள்ளார். நேற்று முன்தினம் 'பேன்சி' ரக பட்டாசு தயாரித்தபோது அதிக வெயில் காரணமாக மணி மருந்து நீர்த்து வெடிவிபத்து ஏற்பட்டது. ஆலை அறைகள் தரைமட்டமாகின. 6 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர்.
இரவானதால் நேற்று மீட்புபணி கைவிடப்பட்டது. நேற்று காலை மீண்டும் மீட்புபணி நடந்தபோது முக்கூட்டு மலை குருசாமி 50 என்பவரின் உடல் கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப் பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. ஆலை உரிமையாளர் கணேசன், குத்தகைதாரர்களான திருச்சி ஜெயக்குமார், கரூர் பாலகிருஷ்ணன், சிவகாசி குட்டி, வெம்பக்கோட்டை சக்கம்மாள்புரம் மகேஷ்வரன், மார்க்கநாதபுரம் மதியழகன் உட்பட மேலும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X