சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து ரூ.27 லட்சம் மோசடி

Added : மார் 22, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றதாகவும், பணி நியமனத்திற்கு 27 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை, சம்மட்டிபுரம் பாண்டியன்நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் மதுரூபன். இவர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வை
2016 ஜன.,ல் எழுதியுள்ளார். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி.,யின் அதிகார பூர்வ வெப்சைட்டில் இருந்து மதுரூபனுக்கு குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றதாக மின் அஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், சண்முகசுந்தரத்தை தொடர்பு கொண்ட சிவா, நாகேந்திர ராவ், ரமணி என்ற ராஜேந்திரன் ஆகியோர் மதுரூபனுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றால் 27 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். தராவிட்டால் மதுரூபன் பெயர் தேர்ச்சி பட்டியலில் இருந்து நிறுத்தி வைக்கப்படும், என தெரிவித்தனர். இதனை நம்பிய சண்முகசுந்தரம் 2018 டிச.,ல் ராமேஸ்வரம் கோயிலில் வைத்து 27 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இது வரை பணி நியமனம் பெற்றுத்தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.

இது குறித்து சண்முகசுந்தரம் ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமாரிடம் புகார் தெரிவித்தார். ராமநாத புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 27 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேரையும் தேடி வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., அதிகாரபூர்வ வெப்சைட்டில் இருந்து தகவல் அனுப்பியுள்ளதால் அந்த, அலுவலகத்தில் பணிபுரியும் நபர் மூலம் இந்த மோசடி நடந்துள்ளது. ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் முறைகேடு செய்து ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளில் தேர்வு எழுதியவர்கள் பணி நியமனம் பெற்றதில் பலர் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு மோசடி அம்பலமாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X