பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுவினர் மூலம் தினமும் 2 ஆயிரம் முக கவசங்கள் தயாரிப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement
சிவகங்கை : மாவட்டத்தில் மகளிர் குழுவினர் சார்பில் கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்கான முக கவசம் (மாஸ்க்) தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட மகளிர் திட்டம் மூலம் சிவகங்கை உட்பட 4 இடங்களில் மகளிர் குழுவினர் பின்னலாடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் நோக்கில், சுகாதாரத்துறையினர் கைகழுவும் முறை பயிற்சி, மருத்துவ

சிவகங்கை : மாவட்டத்தில் மகளிர் குழுவினர் சார்பில் கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்கான முக கவசம் (மாஸ்க்) தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாவட்ட மகளிர் திட்டம் மூலம் சிவகங்கை உட்பட 4 இடங்களில் மகளிர் குழுவினர் பின்னலாடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் நோக்கில், சுகாதாரத்துறையினர் கைகழுவும் முறை பயிற்சி, மருத்துவ குழு கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உறுதுணை புரியும் நோக்கில் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், மகளிர் குழுவினர் மூலம் முககவசம் (மாஸ்க்) தயாரிக்கும் பணியில் மகளிர் ஈடுபடுகின்றனர்.

வாணியங்குடி வெள்ளை விநாயகர் மகளிர் குழுவினர் தைக்கும் முககவசங்களை சேகரித்தனர். அவற்றை கலெக்டர் ஜெயகாந்தன், சுகாதார துணை இயக்குனர் யசோதாமணியிடம் வழங்கினார். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு வழங்க கூறி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேலு, மகளிர் திட்ட இயக்குனர் அருண்மணி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா, ஊராட்சிகள் உதவி இயக்குனரிடம் ஒப்படைத்தார். தினமும் 2 ஆயிரம் முக கவசம்: மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி கூறியதாவது, மாவட்டத்தில் 4 இடங்களில் பின்னலாடை தைக்கும் பணியில் மகளிர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள, மருத்துவமனை, சுகாதாரநிலைய டாக்டர், நர்சு, ஊழியர்களுக்கு வழங்க, மையத்திற்கு தினமும் 500 முக கவசம் வீதம், 2 ஆயிரம் முக கவசம் தயாரித்து வழங்குகிறோம். இது தவிர ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு வழங்கவும், முக கவசம் தயாரித்து தருகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X