பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு பிரசாரம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

பரமக்குடி : பரமக்குடி பஸ்ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேசன் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பரமக்குடியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் யசோதாமணி தலைமையில், பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேசனில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், நோய் தாக்குதல் குறித்து வெப்பமானி கொண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.

*பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில், சங்க பொதுச் செயலாளர் ஹாரிஸ் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கினர். இதன் படி பஸ்ஸ்டாண்ட், வாரச்சந்தை, ஆற்றுப்பாலம், ஓட்டப்பாலம், ஐந்துமுனை, பஜார் என பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

சங்க தலைவர் ஜெயவீரபாண்டியன், சண்முக சுந்தரம், நாராயணன், லட்சுமிநாராயணன், அஜ்மீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். *பரமக்குடியில் கண்தானம், ரத்ததானம் உள்ளிட்ட விழிப்புணர்வு மற்றும் பல்வேறு முகாம்களை நடத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியர்
அய்யப்பன் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நோட்டீசை பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X