சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் 100 நாள் திட்டத்தில் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்புவனம் : கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து 100 நாள் திட்டத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 100 நாள் திட்டத்தின் கீழ் கண்மாய் மராமத்து, கால்வாய் சுத்தம் செய்தல், மரக்கன்று வளர்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 45 ஊராட்சிகளை சேர்ந்த 153 கிராமங்களிலும் ஒரு சில கிராமங்கள் தவிர்த்து மற்ற கிராமங்களில் 100 நாள் திட்ட பணிகள் நடந்தவண்ணம் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து 100 நாள் திட்ட பணியில் 20 தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

அவர்களையும் ஒவ்வொருவருக்கும் இடையே 2 மீட்டர் இடைவெளி விட்டு பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உணவு நேர இடைவெளியில் தனித்தனியாக அமர்ந்து உணவு உண்ணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுகையில் 100 நாள் திட்ட பணிகளை நிறுத்தினால் ஏழை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என் பதால் எண்ணிக்கையை குறைத்து சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டு வருகிறது. உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கபட்டு வருகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X