சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் மூடல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்புவனம், : தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தமிழகத்திலேயே மிகவும் புகழ் பெற்றது. வாரம்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதும். கொரானோ வைரஸ் பரவி வரும் வேளையில் மடப்புரத்திற்கும் பக்தர்கள் பயமின்றி வந்து சென்றனர்.காலை எட்டு மணி பூஜை முடிந்த பின் தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் செயல் அலுவலர் செல்வி அறிவித்தார். பக்தர்களின் வசதிக்காக கோயில் வாசலில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

ஆகமவிதிப்படி தினசரி நான்கு கால பூஜை மட்டும் நடைபெறும் என்றும் வரும் மார்ச் 31 வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோபுரத்தை மட்டும் வணங்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X