வட கொரியா ஏவுகணை சோதனை தென் கொரியா கடும் கண்டனம்

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

சியோல்: கிழக்காசிய நாடான வட கொரியா நடத்திய ஏவுகனைச் சோதனைக்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.latest tamil newsஇது குறித்து தென் கொரிய ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த பீதியும் பயமும் நிலவுகிறது. ஒட்டு மொத்த நாடுகளும் வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் வட கொரியா மட்டும் அடாவடியாக செயல்படுகிறது.

அந்த நாட்டு ராணுவம் கிழக்கு கடல் பகுதியில் நேற்று முன்தினம் குறுகிய துாரம் பாய்ந்து தாக்கக் கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது; இது முறையற்ற செயல்.வட கொரியா தன் ராணுவ பலத்தை நிரூபித்து காட்டுவதற்கான நேரம் இதுவல்ல.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsவட கொரியாவின் ஏவுகணைச் சோதனையால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இதுபோன்ற நேரங்களில் ஏவுகணைச் சோதனை நடத்துவது சரியான செயல் அல்ல என்றும் ஜப்பானும் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-மார்-202016:36:20 IST Report Abuse
Lion Drsekar குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபிக்கிறது இன்றய விஞ்ஞானம், நாம் அனைவரும் வாழ்வதே அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் ஒரு கோலத்தில், அதில் இருந்து கொண்டு அந்த கோளத்தையே அணுகுண்டு போட்டு சின்ன பின்னமாக்கினால் என்னாகும், ஒட்டு மொத கோலமும் சிதறி காற்றில் பஞ்சாகிப்போகும் , ஏதோ நாம் தரையில் இருப்பது போலவும் சந்திரன், சூரியன் , நட்சத்திரங்கள் அந்தரத்தில் இருப்பதுபோலவும் நினைத்துக்கொண்டு தினம் தினம் தீவிரவாத செயல்களில் ஈடுபதுவது, அண்டை நாடுகளை தாக்குவது , கல்வி அறிவு முழுமையாக பெற்ற யாராக இருந்தாலும் ஆங்கிலத்தில் கூறுவது போல் : Look before you leap": என்பார்கள் அது போல் இந்த பூமி என்ற கோளம் உலகுக்கு பொதுவான சொத்து, அதை நாம் சேதப்படுத்தக்கூடாதும், நாம் அனைவரும் , நாமும் வாழவேண்டும், மற்றவர்களும் ஏன் மற்ற உயிரனங்களும் வாழவே பிறந்துள்ளன என்ற நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இந்த பூமி இன்னமும் சிலகாலம் இருக்கும், எப்போதும் போல் அரசியலை தொடாமல் இருக்க முடியவில்லை, அவர்களும் மற்றவர்களும் தங்கள் அனுபவிப்பதை மற்றவர்களும் அனுபவிக்கட்டும் என்ற நோக்கில் செயல்பட்டால் ஜனநாயகமும் செழிக்கும், மொத்தத்தில் இந்த கோளத்தில் எந்த மூலையில் யார் எப்படி செயல்பட்டாலும் அது அவர்களின் எதிரிகளை மற்றும் பாதிக்காது , ஒட்டு மொத்த பூமியும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்தால் இது போன்ற நாசவேலைகளில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் வாழ்வை அர்ப்பணித்து இவையகம் வாழ முயல்வார்கள் . வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
22-மார்-202013:07:32 IST Report Abuse
J.Isaac உலகமே கொரோனாவால் அலைமோதிக்கொண்டிருக்கும் போது தங்கள் சுயபலத்தை காட்ட இது தக்க நேரமல்ல. ஆணவம் அதிகமானால் அழிவு திடிரென்று வரும்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Praveen - coimbatore,இந்தியா
22-மார்-202012:40:54 IST Report Abuse
Ramesh Praveen இவனை போன்றவர்களால் தான் உலகம் இன்று அழிவுப்பாதையை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது, ஒன்றும் அறியா மனித உயிர்கள் செத்து மடியும் பொது இவன் இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொது இந்த மனித ஜென்மத்தையும் இன்னும் பூமி தாங்கி கொண்டிருக்கிறது என்பது வேதனையான விஷயம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X