இளையோரையும் கொரோனா தாக்கும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

ரோம்; 'கொரோனா வைரஸ், முதியோரை மட்டுமன்றி, இளையோரையும் தாக்கும் ஆபத்து உள்ளது,'' என, உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ரோஸ் அதனம் கெப்ரேசஸ் எச்சரித்துள்ளார்.latest tamil newsஇது குறித்து அவர் கூறியதாவது: கொரோனா, நோய் எதிர்ப்பு திறன் குறைந்த முதியோரைத் தான் தாக்கும் என, கருத வேண்டாம்; திடகாத்திரமாக உள்ள இளையோரையும் தாக்கி, மரணக் குழியில் தள்ளும்; அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


latest tamil newsகொரோனா தாக்காமல் இருக்க, மது அருந்துதல், புகை பிடித்தலை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக சர்க்கரை உள்ள குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். சுகாதார வசதிகள் குறைவான நாடுகளில், மக்கள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும். இந்நாடுகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதற்கு, உலக நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
22-மார்-202022:12:05 IST Report Abuse
s t rajan இத்தாலி அதிபர் கண்ணீருடன் பேசியதாக செய்திகள் வருகின்றன. இறைவனிடம் தஞ்சம் அடைவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. இந்த மாதிரி விஷயங்களில் பண/படை பலம் மட்டுமே ஒன்றையும் சாதிக்க முடியாது. நம் பகுத்திறிவில்லா அரசியல் வ்யாதிகளும் அவர்களைச் சார்ந்தோரும் இதை உணர வேண்டும் மூட நம்பிக்கைகள் என்று கேலி செய்யப்பட்ட நம் வாழ்வு நெறிகளை, முஅ முன்னெச்சரிக்கைகளாக மீண்டும் நடைமுறைப் படுத்த சொல்லிவிட்டதல்லவா இந்த 'கோர' கொராணா தொற்று. நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல் பாயிற் கிடவாமல் இருக்க அந்த பரம்பொருளையே சிக்கெனப் பிடிப்போம்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
22-மார்-202013:51:58 IST Report Abuse
S.Baliah Seer இளைஞர், முதியோர் வேறுபாடு இன்றி Week Mind உள்ள எல்லோரையும் கொரோனா மட்டுமின்றி எல்லா வைரஸ் மற்றும் வியாதிகள் தாக்கும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் .
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
22-மார்-202012:11:00 IST Report Abuse
ocean kadappa india துஷ்டர்களுக்கு நல்லவன் கெட்டவன் தெரியாது. அது போல் வியாதிகளுக்கும் பெரியவர்கள் குழந்தைகள் இளையோர் என பாகுபாடு தெரியாது. இது ஒரு பெரிய கண்டு பிடிப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X