பொது செய்தி

இந்தியா

ரயில்களில் முன்பதிவு ரத்து விதிமுறைகளில் தளர்வு ; ரயில்வே அறிவிப்பு

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி : ரத்து செய்யப்படும் ரயில் டிக்ககெட்டுகளுக்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் விதிமுறைகளிலும் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.latest tamil news
பல நாடுகளையும் அச்சுறுத்திய கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய் பாதிப்பு மற்றும் பரவுதல் தொடர்பாக மக்கள் தொலைதூர பயணங்களையும் தவிர்த்து வருகின்றனர். முன்பதிவு செய்தவர்கள் தங்களது டிக்கெட்டை ரத்து செய்ய நேரடியாக கவுன்டருக்கு வந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம். அதற்கான கால அவகாசம் 45 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 21 முதல் ஏப்.,15 வரை ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் 45 நாட்களுக்குள் தங்களது பயண டிக்கெட்டை ஒப்படைத்துவிட்டு கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்.


latest tamil news
தொடர்ந்து ரயில்வேயில் ரத்து செய்யாமல் , பயணியே தனது பயணத்தை ரத்து செய்தால் 30 நாட்களுக்குள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இது தற்போது 3 நாட்களாக வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எண் '139' மூலம் ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கும் 30 நாட்களுக்குள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேநேரம் இணையதளம் மூலம் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை திரும்பப்பெற தற்போதைய விதிமுறைகளே கடைப்பிடிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மேலும் ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்களின் டிக்கெட்டை ரூ.10 யிலிருந்து ரூ.50 வரை உயர்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
22-மார்-202013:22:35 IST Report Abuse
Nallavan Nallavan எத்தனை நாட்கள் வரை ரத்து செய்வீர்கள் என்பதை மருத்துவர்களுடன், நிபுணர்களுடன் ரெயில்வே கலந்தாலோசித்து விரைவில் மீடியா மூலம் அறிவிக்கவேண்டும் ....
Rate this:
Cancel
sriraman - chennai,இந்தியா
22-மார்-202013:14:50 IST Report Abuse
sriraman sir i cancel for 27th march night journey ticket on 21st march but 70% fare deduct from my ticket. is it correct. due to corona i cancel ticket. any chance of getting full refund amount
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
22-மார்-202012:58:38 IST Report Abuse
vijay நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X