கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.2,570 கோடி நிதி; நிர்மலா சீதாராமன்

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement

புதுடில்லி : கொரோனா பரவாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



latest tamil news




உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவிற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் இதுவரை 5 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா வைரஸின் எதிரொலியாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் அடிப்படை சேவைகளை வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதில் நகர பகுதிகளுக்கு ரூ.1,629 கோடியும், ஊரகப் பகுதிகளுக்கு ரூ.940 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் வாரியாக, தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news




தொடர்ந்து, ஆந்திராவிற்கு முதல் தவணையாக ரூ.431 கோடி மற்றும் 2 வது தவணையாக
ரூ. 870.2363 கோடி நிதி , ஒடிசாவிற்கு முதல் தவணையாக ரூ.186.58 கோடி நிதியும் , மேகாலயா மற்றும் நாகலாந்துக்கு 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான நிதியாக முதல் தவணையில் முறையே ரூ.1.515 கோடி மற்றும் ரூ.6.115 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசத்திற்கு முதல் தவணையாக ரூ.16.215 கோடியும், 2வது தவணையாக
ரூ.70.57 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து பகுதிகளுக்கும் சேர்த்து ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
22-மார்-202019:41:56 IST Report Abuse
J.Isaac எப்போதுமே திருட்டு எண்ணம்தானா? நல்ல சிந்தனைகளே வராதா?
Rate this:
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
22-மார்-202020:04:04 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. நீங்கள் சொல்லுவது சரி தான் அம்மணி வந்ததில் இருந்தே ராசி இல்லை என்ன செய்வது மாற்றனும் துறையை மாற்றி கணபதி ஹோமம் லஸ்மி ஹோமம் பண்ணனும்...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-மார்-202019:39:03 IST Report Abuse
Bhaskaran அடுத்து நடுத்தரமக்களின்மீது கொரானா மீட்பு வரி என்று புதிதாக போடவேண்டாம்
Rate this:
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
22-மார்-202016:27:37 IST Report Abuse
முதல் தமிழன் Tax how much you will increase to ordinary citizens. Your government proves corona far better in ing people.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X