பொது செய்தி

இந்தியா

மக்கள் ஊரடங்கு: அமைதியான தமிழகம்

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (77+ 14)
Share
Advertisement
jantacurfew22march, jantacurfew, மக்கள்ஊரடங்கு, ஊரடங்கு, தமிழகம், சாலைகள், தமிழ்நாடு,

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளின்படி, நாடு முழுவதும், சோதனை முயற்சியாக, இன்று(மார்ச் 22) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 'மக்கள் ஊரடங்கு' நடத்தப்படுகிறது.


latest tamil news




தமிழகத்தில், மக்கள் ஊரடங்கு காலை 7 மணிக்கு துவங்கியது. இந்த ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் அரசு பஸ்கள் ஓடாது என தமிழக அரசு அறிவித்தது. கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்கள் அடைக்கப்பட்டிருக்கும் என அதன் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதன்படி, அரசு பஸ்கள் இயங்கவில்லை. ரயில்களும் இயக்கப்படவில்லை. ஓட்டல்கள், மார்க்கெட்கள், கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.


latest tamil news


Advertisement


ஆட்டோக்களும் இயங்கவில்லை. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, மக்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சாலைகளில் ஒரு சிலரே நடமாடுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கோயம்பேடு, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்கள் அடைக்கப்பட்டுள்ளன.


latest tamil news



latest tamil news



latest tamil news





கோவை நிலவரம்

கோவையிலும், மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு காணப்படுகிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். நடைபயிற்சி செய்பவர்கள் மட்டுமே சாலைகளில் சென்றனர். பஸ்கள், வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. ஒரு சில டூவிலர்கள் மட்டுமே சென்றன. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் ஒரு சில டீக்கடைகள் மட்டும் செயல்படுகிறது. அதுவும் விரைவில் அடைக்கப்படும் என தெரிகிறது. இறைச்சி கடைகளில் ஒரு சில திறந்துள்ளது. அங்கு மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. நகரில், டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமான போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். வணிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


latest tamil news




latest tamil news




திருப்பூர் நிலவரம்


பிரதமர் வேண்டுகோளை ஏற்று, மக்கள் ஊரடங்கு, திருப்பூரில் அமைதியாக நடந்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் ஏதும் இயக்கப்படவில்லை. கடைகள், மார்க்கெட்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை, மக்கள் முழுமையாக பின்பற்றி வருகின்றனர். அவினாசி, பல்லடம், வெள்ளகோவில், பொங்கலூர், காங்கயம், தாராபுரம் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மக்கள் ஊரடங்கு நடந்து வருகிறது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். மாவட்டத்தில் 100 சதவீத மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.



நகரங்கள் வெறிச்


சென்னையில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் கத்திப்பாரா சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்கள் வெறிச்சோடியுள்ளன. மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லை.


தூத்துக்குடி நிலவரம்


தூத்துக்குடியில்,பொதுமக்களும், வணிகர்களும், தனியார் நிறுவனத்தினரும் இந்த மக்கள் ஊரடங்கு உத்தரவை ஏற்று இன்று கடைகளை அடைத்து தங்களின் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் திருநெல்வேலி- பாளையங்கோட்டை சாலை, தூத்துக்குடி -புதிய துறைமுக சாலை, மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய பகுதிகளிலும் கடைகள், உணவகங்கள், சந்தைகள், வாடகை கார் நிறுவனங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தன. இதனால் ஊரே அமைதியுடன் காணப்பட்டது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2 சுழற்சிமுறை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் வீட்டிலேயே தொலைக்காட்சி முன்பு முடங்கி கிடந்தனர்.மக்கள் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்கவில்லை. தூத்துக்குடியில் உள்ள அம்மா உணவகங்கள் மற்றும் பால் விற்பனை செய்யும் கடைகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் தவிர அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

Advertisement




வாசகர் கருத்து (77+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
22-மார்-202022:19:43 IST Report Abuse
Rameeparithi சபாஷ் தமிழகம் ...
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - கலைஞர் சமாதியில் தயிர் வடை ,இந்தியா
22-மார்-202020:41:07 IST Report Abuse
வல்வில் ஓரி மோடி அவர்கள் சீனா அதிபரை மஹாபலி புறத்தில் கூப்பிட்டு சென்று இட்டிலி வடை சாம்பார் கொடுத்திருக்கு சைனகரான் கொடுத்தான் பாரு ஆப்பு
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
22-மார்-202019:58:18 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு மோடி அண்ட் கோ விற்கு ராசி இல்லை இவர்கள் வந்ததில் இருந்தே வெறும் சோகம் தான் இந்தியாவில் நடக்குது ஆகவே மோடியை இறக்கி விட்டு படித்த கெஜ்ரிவால் நிர்மலாவை இறக்கி விட்டு வேறு யாரவது IRS ஐ நியமிக்கலாம் . நாடு உருப்பட இந்த உருப்படியான ஐடியா செய்யலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X