பொது செய்தி

இந்தியா

நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிப்பு

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
jantacurfew22march,jantacurfew,india, PmModi

புதுடில்லி: பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும், 14 மணி நேர மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுகிறது.

சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ், இப்போது உலக நாடுகளிலும் தன் கொடூர முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 5 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து மக்கள் தனிமையில் இருக்க வேண்டும். கூட்டம் கூடக்கூடாது. விழாக்கள் உட்பட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.


latest tamil news



கடந்த 19 ம் தேதி டிவி மற்றும் ரேடியோ வழியாக நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, 'கொரோனா பரவலை தடுக்க அடுத்த மூன்று வாரங்களுக்கு தனிமையில் இருக்க மக்கள் பழக வேண்டும். சமூக விலக்கலை கடைபிடிக்க வேண்டும். இதற்கான சோதனை முயற்சியாக 22ம் தேதியன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


latest tamil news



பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு மாநிலஅரசுகள், சமூக அமைப்புகள் உட்பட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று ஊரடங்கை கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்துள்ளன. பல மாநிலங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களும், பயணியர் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.


latest tamil news



இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு துவங்கிய மக்கள் ஊரடங்கு, நாடு முழுவதும் அமைதியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் ஏதும் இயங்காததால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் மக்கள் ஊரடங்கு அமைதியாக நடந்து வருகிறது. மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மார்-202005:54:10 IST Report Abuse
இவன் , ஓசி சோறு கூட்டம், திருட்டு டீமுக, அல்லேலூயா இந்த கூட்டம் கொரோன கு கூட சப்போர்ட் பண்ணும் ஹிந்து னு சொன்ன PM CM கு சப்போர்ட் பண்ணாது
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
22-மார்-202022:22:30 IST Report Abuse
g.s,rajan Is it diverting tactics???may be . g.s.rajan Chennai
Rate this:
Share this comment
Cancel
22-மார்-202020:05:29 IST Report Abuse
ஹாஜா குத்புதீன் கொரோனா வைரசுக்கு ஜாதி மதம்லாம் தெரியாது.உயிர் ஆசை இருப்பவன் அரசின் வழிகாட்டலை கடைபிடித்து தான் ஆவனும்.ஆ வூன்னு எவனாவது கத்துனா உள்ளே போட்டு நொங்குதான் எடுக்கனும்.எந்த நேரமும் மதத்தையே கட்டி அழுரவன் பைத்தியக்காரன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X