கொரோனா பரிசோதனைக்கு 74 பேர் அனுமதி: 41 பேர் வீடு திரும்பினர்; கலெக்டர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனைக்கு 74 பேர் அனுமதி: 41 பேர் வீடு திரும்பினர்; கலெக்டர் தகவல்

Added : மார் 22, 2020
Share

ஈரோடு: மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட, 74 பேர்களில், 41 பேர் எவ்வித பாதிப்புமில்லை என்பதால், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள, கொரோனா சிறப்பு வார்டில், கலெக்டர் கதிரவன் நேற்று ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்காக இதுவரை, 74 நபர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில், 20 நாட்கள் தொடர் பரிசோதனை முடிந்து, 41 பேருக்கு எவ்வித பாதிப்புமில்லை என்பது தெரிந்ததால், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதி, 33 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். கொல்லம்பாளையத்தில் தங்கியிருந்த, தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஆறு பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் ஒருவருக்கு மட்டும் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிறப்பு வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோபி அரசு மருத்துவமனையில் ஒருவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனையில் நான்கு பேர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோபியில் நேற்று முன்தினம் குடிநீர் திட்டப்பணிக்கு வந்த, 24 வடமாநில தொழிலாளர்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கண்டறியப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளை (இன்று) மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்களுக்கு அனுமதியில்லை. ஈரோட்டில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு, 17 அரசு பஸ்களும், கர்நாடகாவில் இருந்து, 36 அரசு பஸ்களும் இயக்கப்பட்டன. இவை அனைத்தும் வரும், 31ம் தேதி வரை இயங்காது. கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கு, மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X