வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர்

Added : மார் 22, 2020
Share
புன்செய்புளியம்பட்டி: வன விலங்குகள் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை, வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.ஆசனூர் வனச்சரக வனப்பகுதி யில், யானை, புள்ளி மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. தற்போது வனங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விலங்குகளுக்கு குடிநீர் பெரிய பிரச்னையாக உள்ளது. தண்ணீர் தேடி யானைகள் ஊருக்குள் அடிக்கடி

புன்செய்புளியம்பட்டி: வன விலங்குகள் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை, வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
ஆசனூர் வனச்சரக வனப்பகுதி யில், யானை, புள்ளி மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. தற்போது வனங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விலங்குகளுக்கு குடிநீர் பெரிய பிரச்னையாக உள்ளது. தண்ணீர் தேடி யானைகள் ஊருக்குள் அடிக்கடி நுழைகின்றன. இதனால் விவசாய பயிர்கள் நாசமாவதோடு, மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், ஆசனூர் வனச்சரக காப்பு காடுகளில், விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக கட்டப்பட்ட தொட்டிகளில், டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்று, வனத்துறையினர் நிரப்பி வருகின்றனர். இதன்படி தாளவாடி, கேர்மாளம், ஜீரஹள்ளி உள்ளிட்ட காப்பு காடு தொட்டியில், டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்பட்டது. மழை பெய்யும் வரை, வாரத்துக்கு, இரண்டு முறை டிராக்டர் மூலம், தொட்டிகளில் தண்ணீர் விடப்படும் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X