பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பஸ், வேன், டாக்ஸி, ஆட்டோக்கள் இன்று நிறுத்தம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்று, பிரதமரின் யோசனைப்படி நடக்கும் ஊரடங்கு உத்தரவின்படி, அனைத்து தனியார் பஸ், வேன், டாக்ஸி, ஆட்டோக்களும் முழுமையாக இயங்காது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, இன்று மக்கள் ஊரடங்கு உத்தரவு செயல்பாட்டில் இருக்கும். இதனால், ஈரோடு மண்டலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ்கள், 870, தனியார் பஸ்கள், 269 முழுமையாக நிறுத்தப்படும். தொலைதூர பஸ்கள் மட்டும் அதிகாலை வரை அனுமதிக்கப்படும். தவிர, 1,200க்கும் மேற்பட்ட வேன், மேக்ஸி கேப், டாக்ஸி போன்றவை செயல்படாது. ஆட்டோக்களும் முழுமையாக நிறுத்தப்படுகின்றன. அவசர தேவை, விபத்து, உடல் நலக்குறைவு போன்றவைகளுக்கு, 108 ஆம்புலன்ஸ் செயல்படும். அவசியம் கருதி, சில ஆட்டோ, டாக்ஸிகள் அனுமதிக்கப்படும். லாரிகளின் இயக்கம் மாநில அளவில் அதிகாலையுடன் நிறுத்தப்படுவதால், முழுமையாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X