பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோரவாசிகள் மாநகராட்சி விடுதிகளில் இன்று தங்கி கொள்ளலாம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், வ.உ.சி., பூங்கா, சோலார், அரசு மருத்துவமனை என மூன்று இடங்களில், மாநகராட்சி இலவச தங்கும் விடுதிகள் உள்ளன. இன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதால், தங்க இடவசதியில்லாத மக்கள், சாலையோரம் வசிப்பவர்கள், விடுதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: ஈரோட்டில் சாலையோரம் தங்குவோரின் எண்ணிக்கை மிக குறைவு. அப்படியே இருந்தாலும், வ.உ.சி., பூங்கா மற்றும் சோலார் பகுதியில் உள்ள மாநகராட்சி தங்கும் விடுதிகளில் தங்கிக் கொள்ளலாம். அதேசமயம் அரசு மருத்துவமனையில் உள்ள விடுதியில், நோயாளியின் உறவினர்கள் தங்கி கொள்ளலாம். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X