பொது செய்தி

தமிழ்நாடு

பெருந்துறை மருத்துவ கல்லூரியில் அன்னியருக்கு அனுமதியில்லை

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஈரோடு: பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகத்துக்கு ஆளான, ??க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளதால், அன்னியர்களை அனுமதிக்கக்கூடாது, என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தாக்கம் இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்தாலும், கொரோனா அறிகுறியுடன் சிக்கிய தாய்லாந்தை சேர்ந்த ஐவர், அவர்களுடன் இருந்த நான்கு பேர், கோபியை சேர்ந்த சிலர், ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவ்விடங்களை கலெக்டர் கதிரவன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சவுண்டம்மாள், மருத்துவ கல்லூரி முதல்வர் செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தனர். இன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதால், பெருந் துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவ மனையில் அன்னியர்களை அனுமதிக்க வேண்டாம். உடல் நலக்குறைவால் வருவோரை மட்டும் அனுமதிக்க வேண்டும். குறிப்பாக, கொரோனா வைரஸ் தனி வார்டு பகுதியில், யாரையும் அனுமதிக்கக்கூடாது, என கலெக்டர் உத்தரவிட்டார். ஏற்கனவே, அவ்வளாகத்தில் காசநோய் பிரிவு, பிற சிகிச்சை பிரிவு உள்ளதால், குறிப்பிட்ட பிரிவுக்கு செல்பவர்களை, கொரோனா சிகிச்சை பிரிவு பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது. அங்கு சிறப்பு பணியாளர்களை நியமித்து தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X