பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : மார் 22, 2020
Share
Advertisement

கோழிக்கழிவால் சுகாதார சீர்கேடு: மொடக்குறிச்சி யூனியன், புஞ்சைகாளமங்களம் பஞ்., கம்பத்தையன் கோவில், குளக்கரையோரத்தில் கோழிக்கழிவை கொட்டுகின்றனர். குடல், இறந்து போன கோழிகளின் உடலும் சேர்வதால், சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. நாய்கள் கழிவை ருசி பார்க்க வருவதால், தகராறு ஏற்பட்டு, மோதிக் கொள்கின்றன. கோழிக்கழிவை கொட்டுவோர் மீது பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலர் களமான பஸ் ஸ்டாண்ட்: மொடக்குறிச்சி யூனியன், 46 புதூர் பஞ்.,ல் ஆணைக்கல்பாளையம் அருகே, 2014ல், 1.50 கோடி மதிப்பில் ஊரக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. ஓரிரு நாட்கள் செயல்பட்ட பிறகு முடங்கி விட்டது. இதனால் குடிமகன்களுக்கு பாராக, திறந்த வெளி கழிப்பறையாக, நண்பர் களின் பொழுதுபோக்கு மையமாக உள்ளது. தற்போது விவசாயிகள் உலர் களமாக பயன்படுகிறது. ஒரு பஸ் ஸ்டாண்ட் எத்தனை அவதாரம் எடுப்பது? எடுப்பார் கைபுள்ளையாக நிர்வாகம் போனால், இப்படித்தானே ஆகும்?

குறுகிய திருப்பம்; வேகத்தடை தேவை: கோபி அருகே, புதுக்கரைப்புதூரில் இருந்து, பொலவக்காலிபாளையம் செல்லும் சாலையில், குறுகிய திருப்பம் உள்ளது. டூவீலர்கள், சரக்கு வாகனங்கள் அசுர வேகத்தில் பயணிக்கின்றன. குறுகிய திருப்பத்தில் இருந்து, பிரதான சாலையில் நுழையும் வாகனங்கள், அதே வேகத்தில் வருவதால், சில சமயங்களில் விபத்து ஏற்படுகிறது. இரவில் இதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறுகிய திருப்பத்தில் வேகத்தடை அமைத்தால், தீர்வு கிட்டும்.

காய்கறி குப்பை காற்றில் பரவல்: ஈரோடு, அகில்மேடு வீதியில் உள்ள சின்ன மார்க்கெட்டில், 40க்கும் மேற்பட்ட கடைகள், தற்காலிக தரைக்கடைகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் காலை நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்து செல்கின்றனர். இவ்வளாகத்தில், அம்மா உணவகமும் உள்ளது. வளாகத்தில் குப்பை குவித்து, காய்கறி, இலைக்கட்டு கழிவை போடுகின்றனர். இவை காய்ந்து பறப்பதுடன், கால்நடைகள் தீனிக்காக கலைத்து நாசப்படுத்துகிறது. அவ்வப்போது அகற்றி சுகாதாரம் காக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X