பொது செய்தி

தமிழ்நாடு

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் தங்கிய 2 பள்ளிவாசலில் தொழுகை அனுமதி ரத்து: கூட்டு தொழுகையும் ரத்து - அரசு ஹாஜி தகவல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஈரோடு: கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதி மறுத்து, மாநகராட்சி ஆணையர் கடிதம் வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 52 பெரிய கோவில்கள் உட்பட, 100க்கும் மேற்பட்ட ஹிந்து கோவில்கள் கொரோனா தொற்று பரவுவதை தவிர்க்கும் வகையில் மூடப்பட்டன. அதேசமயம் பள்ளிவாசல், சர்ச்களில் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்று வழிபாடு நடத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதற்கிடையில், ஈரோடு, கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டையில் உள்ள பள்ளிவாசல்களில், தாய்லாந்தில் இருந்து வந்த, ஏழு பேர் தங்கி இருந்தனர். அவர்களை கடந்த, ஐந்து நாட்களுக்கு முன் மீட்டு, ஈரோடு மற்றும் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கோவையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததுடன், சிறுநீரக கோளாறால் இறந்தார். இவர்கள் தங்கி இருந்த இரு பள்ளிவாசலிலும், அவர்களுடன் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கு பாதிப்புள்ளதா? என்ற சோதனையில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. சிலரை, பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், அவ்விரு பள்ளிவாசலில் தொழுகையை நிறுத்தி, மீண்டும் தொழுகைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாதென, கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். எஸ்.பி., சக்திகணேசன் ஆலோசனைப்படி, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், இரு பள்ளிவாசலிலும் தொழுகைக்கு அனுமதி மறுத்து, அறிவிப்பு நோட்டீ?ஸ வழங்கினார். இதை தொடர்ந்து, இரு பள்ளிவாசலும் மூடப்பட்டது.

இதுபோல, மாவட்ட அரசு ஹாஜி முகம்மது கிபாயத்துல்லாவுக்கு, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் வழங்கிய அறிவிப்பு கடிதத்தில் கூறியதாவது: தற்போது பரவும் கொரோனாவை கருத்தில் கொண்டு, வழிபாட்டு இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், பள்ளி வாசல்களில் வழிபாடு நடத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும். வீடுகளில் இருந்தபடி நிறைவேற்ற வேண்டும். பள்ளிவாசல் கதவுகளை மூடி, கண்காணிக்க வேண்டும், என கேட்டுக் கொண்டார். இதையடுத்து அனைத்து பள்ளிவாசல்களிலும் கூட்டு தொழுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட அரசு ஹாஜி முகம்மது கிபாயத்துல்லா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X