பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி: கலெக்டர் தகவல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஈரோடு: 'ஈரோட்டில் தங்கியிருந்த தாய்லாந்துகாரர்கள் இருவருக்கு, கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், மற்றவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை' என, ஈரோடு கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த, தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஐந்து பேர், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ரத்த மாதிரி பரிசோதனை, சென்னை கிண்டி கிங்ஸ் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உறுதியாகி உள்ளது. அவர்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே உள்ளவர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். அப்பகுதியில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். அனைவர் வீடுகளில் கிருமி நாசினி தெளித்து, அடிக்கடி கைகழுவி சுத்தமாக இருக்க வேண்டும். பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஈரோடு மற்றும் கோபி அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு தனி வார்டு ஏற்படுத்தி, அனைத்து வசதியும் செய்துள்ளோம். மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X