சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூன்றாவது மாடியில் இருந்து குதித்து நேபாள நாட்டு வாலிபர் தற்கொலை

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், தனியார் வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து, வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு இ.வி.என்., ரோட்டில், தனியார் வணிக வளாகத்தில், ஒரு பழமுதிர் நிலையம் உள்ளது. இங்கு நான்கு நாட்களுக்கு முன், நேபாள நாட்டை சேர்ந்வர் ராம் நிக்பால், 32; வேலைக்கு சேர்ந்தார். நேற்று மாலை, 4:45 மணியளவில் கடை ஊழியர்களிடம் திடீரென தகராறு செய்து, வணிக வளாகத்தின் மூன்றாவது (மொட்டை) மாடிக்கு சென்றார். அங்கிருந்தவர்கள் சமரசம் செய்ய முயன்றனர். ஆனாலும், மாடியில் இருந்து குதித்து விடுவதாக மிரட்டியபடி இருந்தார். வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுக்கும் தகவல் பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம் தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். அவரை காப்பாற்றும் நோக்குடன் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தார்ப்பாயை வெளியே எடுத்தனர். இதை பார்த்து விட்ட வாலிபர், கண்ணிமைக்கும் நேரத்தில் குதித்தார். கடை முன் வாகனங்கள் இல்லாத நிலையில் சாலையோரம் விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X