சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலூர் மாவட்ட கலெக்டர் வீட்டின் கதவை உடைத்து 55 சவரன் கொள்ளை

Added : மார் 22, 2020
Share
Advertisement

தஞ்சாவூர்: பேராவூரணி அருகேயுள்ள, கடலூர் மாவட்ட கலெக்டர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், 55 சவரன் நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த நாடியம் கிராமத்தை சேர்ந்தவர், அன்புசெல்வன்; கடலூர் மாவட்ட கலெக்டராக உள்ளார். இவர், மனைவி மாலதி மற்றும் குடும்பத்தினருடன், கடலூரில் வசித்து வருகிறார். நாடியம் கிராமத்தில் உள்ள வீட்டில், அதே ஊரை சேர்ந்த செல்வம், 62, என்பவர் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, செல்வம் வீட்டின் முன்பக்கம் படுத்திருந்த போது, மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து, 55 சவரன் நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். வீட்டில் இருந்த, ஐந்து, 'சிசிடிவி' கேமராக்களை உடைத்து, 'சிசிடிவி' ரெக்கார்டரை, வீட்டின் பின்பக்கம் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் போட்டுச் சென்றனர். நேற்று காலை, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்த செல்வம், கலெக்டர் அன்புசெல்வனுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., சுப்ரமணியன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின், வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X