பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி காந்தி மார்க்கெட்டில் அலை மோதிய மக்கள் கூட்டம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருச்சி: 'கொரோனா'வை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், திருச்சி காந்தி மார்க்கெட்டில், நேற்று, மக்கள் கூட்டம் அலை மோதியது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள ஷாப்பிங் மால்கள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மொத்த வியாபாரக் கடைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களை, மார்ச், 31ம் தேதி வரை மூட வேண்டும், என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவிர, இன்று, அரசு தரப்பில், 'மக்கள் ஊரடங்கு' உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் அரசு பஸ்கள், ரயில்கள், சரக்கு லாரிகள், ஆட்டோக்கள் இயங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, வாரச்சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக, திருச்சி காந்தி மார்க்கெட்டில் அதிக கூட்டம் காணப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மொத்த வியாபாரிகளும் மளிகை மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை காந்தி மார்க்கெட்டில் கொள்முதல் செய்து வருகின்றனர். மால்களும், மொத்த வியாபார கடைகளும் அடைக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவும் அறிவிக்கப்பட்டுள்ளதால், நேற்று காந்தி மார்க்கெட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: திருச்சி காந்தி மார்க்கெட்டில் மளிகை மொத்த வியாபார கடைகள், வெங்காயம், உருளை கிழங்கு, பழங்கள் மற்றும் வாழைக்காய் மண்டிகளும், 2,000க்கும் மேற்பட்ட காய்கறி விற்பனை கடைகளும் உள்ளன. பெரிய ஷாப்பிங் மால்களும், மொத்த விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மார்க்கெட்டில் எப்போதும் இல்லாத வகையில், காலையில் இருந்தே வியாபாரிகளை விட, பொதுமக்கள் தான் அதிகம் வந்து, காய்கறி, மளிகை பொருட்களை வாங்கினர். கடந்த, 20 ஆண்டுகளில், விசேஷ நாட்களில் கூட, இவ்வளவு கூட்டம் வந்ததில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X