பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு 'மாஸ்க்' விற்ற கடையை திறக்க 3 நாட்களுக்கு தடை

Added : மார் 22, 2020
Share
Advertisement

வேலூர்: காட்பாடியில், கிருமிநாசினி, முக கவசம் அதிக விலைக்கு விற்ற, மருந்து கடையை மூன்று நாட்களுக்கு திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், 1,600 மருந்து கடைகள் உள்ளன. கொரோனா பரவலை தடுக்க தற்போது, மருந்து கடைகளில் கிருமிநாசினி, முககவசம், உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பாதுகாப்பு உபகரணங்களை மருந்து கடைகள் அதிக விலைக்கு விற்பதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, சுகாதாரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காட்பாடியில் உள்ள மருந்து கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, காட்பாடி தாராபடவேட்டில் உள்ள கடையில், முககவசம் மற்றும் கிருமி நாசினியை வழக்கமான விலையை விட, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரை எச்சரித்த அதிகாரிகள், மூன்று நாட்களுக்கு கடையை திறக்கக்கூடாது என உத்தரவிட்டனர். அதேபோல், ஆற்காடு சாலையில், உள்ள மருந்து கடையில் ஆய்வு செய்தபோது, முக கவசம் பதுக்கி, அதிக விலைக்கு விற்றது தெரிந்தது. உடனே, முக கவசங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது, கொரோனா தடுப்பு உபகரணங்களை, பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X