சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனருக்கு மிரட்டல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளருக்கு வந்த, கொலை மிரட்டல் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனராக பணிபுரிபவர் செல்வபாலாஜி, 33; இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, குடியாத்தத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர், மொபைல்போனில் தொடர்பு கொண்டு, 'என் மகளை திருமணம் செய்து கொள். இல்லையெனில், உன்னை அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவேன்' என, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, ராணிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், குடியாத்தம் அடுத்த செதுக்கரையை சேர்ந்த இளம்பெண் ரோஜா, 23, நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர் மீது வேலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X