பொது செய்தி

தமிழ்நாடு

கிளை வாரியாக சங்கம்; தடுக்க வலியுறுத்தல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

சேலம்: கிளை வாரியாக, 'மாசு கட்டுப்பாட்டு சங்கம்' தொடங்கப்படுவதன் மூலம், சிறு தொழிற்சாலைகளில், மிரட்டும் போக்கு அதிகரிக்கும் என்பதால், அதை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சேலம் மாநகர பா.ஜ., பொதுச்செயலர் செல்வராஜ் கூறியதாவது: மத்திய அரசு, ஒவ்வொரு துறையிலும் வாரிய உறுப்பினர் நியமிக்கப்படுவதுண்டு. அதேபோல், மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆலோசனைக்குழு உறுப்பினராக, சேலம், தி.மு.க.,- எம்.பி., பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அந்த குழுவில், மாசு பிரச்னை குறித்து ஆலோசனை வழங்க மட்டும் அதிகாரம் உள்ளது. ஆனால், இதை முன்னிறுத்தி, மாவட்டம் முழுவதும், 'மாசு கட்டுப்பாட்டு சங்கம்' பெயரில், கிளை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன்மூலம், நலிந்து வரும் சிறு தொழில் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் போக்கு அதிகரிக்கும். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X