பொது செய்தி

தமிழ்நாடு

சுவேத நதியில் தொடரும் மணல் கடத்தல்: வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்குமா?

Added : மார் 22, 2020
Share
Advertisement

கெங்கவல்லி: கெங்கவல்லி, வீரகனூர் சுவேத நதியில் தொடரும் மணல் கடத்தலுக்கு, வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆத்தூர், கெங்கவல்லி தாலுகா பகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இரு ஆண்டாக போதிய மழையின்றி, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து, பலர் நிலங்களை பயிரிடாமல் வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபரில் பெய்த மழையால், சுவேத நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஏரிகள் நிரம்பின. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், நிறைய மணல் குவிந்தது. நான்கு மாதமாக, ஆற்றில் தண்ணீர் தேங்கி நின்றது. தற்போது வறட்சியால், தண்ணீர் வற்றி வருகிறது. இதை பயன்படுத்தி, கெங்கவல்லி, கூடமலை, 74.கிருஷ்ணாபுரம், வீரகனூர், லத்து வாடி பகுதிகளிலுள்ள ஆற்றில், தங்கு தடையின்றி மணல் கடத்துவதாக, கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த, 16ல், வீரகனூர், தென்கரையில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, 10க்கும் மேற்பட்டோர் மணலை ஜலித்து வைத்து கடத்தினர். இதையறிந்து, மக்கள் அவர்களை தடுத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும், ஆறு, கரையோர மயான பகுதியையும் விட்டு வைக்காமல், மணல் கடத்தி வருகின்றனர். முன்னதாக, பொக்லைன் மூலம் ஆற்றை சுரண்டியதால், கெங்கவல்லி தாலுகா பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. நடப்பாண்டு, தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்க, நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்க, மணல் கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆத்தூர் ஆர்.டி.ஓ., துரை கூறுகையில், ''மணல் கடத்தலை கட்டுப்படுத்த, மூன்று தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மணல் கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X