பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.ஹெச்.,ல் தனி வார்டு தொடக்கம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஓமலூர்: அரசு மருத்துவமனையில், காய்ச்சலுக்கு தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு தினமும், ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். அங்கு, 'வைரஸ் காய்ச்சலுக்கு, தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்காக தொடங்கிய, விபத்து அவசர சிகிச்சை பிரிவை, காய்ச்சல் பிரிவாக தயார் படுத்தி, நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அங்கு, முதன்மை மருத்துவ அலுவலர் சீனிவாசன் உள்பட மூன்று டாக்டர், இரு செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பிரிவில், தேவையான உபகரணங்களுடன், ஒன்பது படுக்கை வசதிகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X