பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பு

Added : மார் 22, 2020
Share
ஆத்தூர்: அரசு, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க, ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்டுக்கு, நேற்று, நகராட்சி கமிஷனர் ஸ்ரீதேவி தலைமையில் தூய்மைப்பணியாளர்கள், பஸ்களில் கிருமி நாசினி தெளித்தனர். பஸ்சின் வெளிப்பகுதி, கைப்பிடியில் தெளித்தனர். டிரைவர், கண்டக்டர், பயணியரிடம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.

ஆத்தூர்: அரசு, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க, ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்டுக்கு, நேற்று, நகராட்சி கமிஷனர் ஸ்ரீதேவி தலைமையில் தூய்மைப்பணியாளர்கள், பஸ்களில் கிருமி நாசினி தெளித்தனர். பஸ்சின் வெளிப்பகுதி, கைப்பிடியில் தெளித்தனர். டிரைவர், கண்டக்டர், பயணியரிடம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகித்தனர். இதில், நகராட்சி, அரசு போக்குவரத்து பணியாளர் பங்கேற்றனர். ஊரக வளர்ச்சித்துறையினர், தாண்டவராய புரத்தில், வீடு, வீடாக சென்று, துண்டு பிரசுரம் வழங்கினர். இன்று ஊரடங்கு நாள் குறித்தும், காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னை இருந்தால், சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வழிமுறை குறித்தும், மக்களிடம் எடுத்துரைத்தனர். தொடர்ந்து, பொது இடங்கள், சாக்கடை ஆகியவை, தூய்மைப்பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டன.
அ.பட்டணத்தில்...: அயோத்தியாப்பட்டணத்தில், பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம், ரயில்வே ஸ்டேஷன், தினசரி சந்தை, பஸ் ஸ்டாப், பஸ்கள், ஆட்டோக்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. பேளூர் பேரூராட்சியில், பெட்ரோல் பங்க், மசூதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

தி.மு.க., சார்பில்...: பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார். அக்கட்சியினர், வீடுகள், பொது இடங்களில், கிருமிநாசினி தெளித்தனர். மக்களுக்கு முக கவசம், கை கழுவ சோப் ஆயில் உள்ளிட்டவை வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X