பொது செய்தி

தமிழ்நாடு

துணியால் முக கவசம் தயாரிப்பு பணி தீவிரம்

Added : மார் 22, 2020
Share
Advertisement
சேலம்: துணியால் முக கவசம் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க, மக்கள், முக கவசங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒரு முறை பயன்படுத்தி, வீசியெறியும் முக கவசங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சுகாதார பணியில் ஈடுபடுவோருக்கு, அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதை

சேலம்: துணியால் முக கவசம் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க, மக்கள், முக கவசங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒரு முறை பயன்படுத்தி, வீசியெறியும் முக கவசங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சுகாதார பணியில் ஈடுபடுவோருக்கு, அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க, அனைவரும் துணியாலான முக கவசங்களை பயன்படுத்த, மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அவற்றை பயன்படுத்திய பின் துவைத்து, வெயிலில் உலர வைத்து மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதால், மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், துணியாலான முக கவசங்களை தைக்கும் பணி, பல்வேறு, 'கார்மென்ட்ஸ்' நிறுவனங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, துணி தயாரிப்பு நிறுவனர் ஒருவர் கூறுகையில், ''ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிவதன் மூலம், திடக்கழிவு சேர்வதோடு, சுகாதார அச்சுறுத்தலும் ஏற்படும். அவற்றை பதுக்கி விற்றால், தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளும் உள்ளன. இதற்கு மாற்றாக, துணியாலான முக கவசங்கள் அமையும். விலையும் குறைவாக இருக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X