பொது செய்தி

தமிழ்நாடு

'அரசு அலுவலகங்களுக்கு கிருமிநாசினி திரவம்'

Added : மார் 22, 2020
Share
Advertisement

சேலம்: அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கிருமிநாசினி திரவம், இலவசமாக அனுப்பிவைக்கப்படுகிறது.
சேலம், நாட்டாண்மை கழக கட்டடத்திலுள்ள, சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில், 'கொரோனா வைரஸ்' 24 மணி நேர கட்டுப்பாடு அறை உள்ளது. அதை, கலெக்டர் ராமன், நேற்று பார்வையிட்டார். அங்குள்ள, 104, 0427 - 2450022, 2450023 என்ற தொலைபேசி எண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு, கொரோனா சந்தேகம் குறித்து கேட்டறியலாம் என தெரிவித்தார். தொடர்ந்து, கிருமிநாசினி திரவம் தயாரிக்கும் பணியை பார்வையிட்டு, அத்திரவத்தால் கை கழுவி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திரவத்தை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஊரக உள்ளாட்சி அலுவலகங்கள், நீதிமன்றம், காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை தொடங்கிவைத்தார். மேலும், கிருமிநாசினி திரவத்தை பயன்படுத்தி, கை கழுவி, தூய்மையை கடைப்பிடிக்க, அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X