சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டூடியோக்களில் கைவரிசை; 'பலே' வாலிபருக்கு காப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement

சேலம்: சேலம், அம்மாபேட்டை, காமராஜர் காலனியைச் சேர்ந்த, மாதையன் மகன் சத்ரியன், 38. இவருக்கு, வீராணம் அருகே, மன்னார்பாளையம் பிரிவு சாலையில், 'கீர்த்தனா' ஸ்டூடியோ உள்ளது. கடந்த, 19, இரவு, 9:00 மணிக்கு, ஸ்டூடியோவை மூடிவிட்டு, வீட்டுக்கு வந்தார். மறுநாள் சென்றபோது, அதன் பூட்டு உடைக்கப்பட்டு, கேமரா, பென் டிரைவ் - 2, ஹார்ட் டிஸ்க் கொள்ளை போனது தெரிந்தது. அவரது புகார்படி, வீராணம் போலீசார் விசாரித்ததில், பக்கத்திலுள்ள மற்றொரு ஸ்டூடியோ, அம்மாபேட்டையிலுள்ள இன்னொரு ஸ்டூடியோவில் கைவரிசை காட்டியிருப்பது தெரிந்தது. மொத்தம், தலா மூன்று போட்டோ, வீடியோ கேமரா, 'சிசிடிவி' கேமரா செட் உள்ளிட்டவை திருடுபோனது தெரிந்தது. தொடர்ந்து விசாரித்ததில், வீராணம், அல்லிக்குட்டை, பாலாஜி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலசுப்ரமணி, 23, கைவரிசை காட்டியது தெரிந்து, அவரை, நேற்று, கைது செய்தனர். வாக்குமூலத்தில், மூன்று ஸ்டூடியோ, கன்னங்குறிச்சியில், ஒரு டியோ ஸ்கூட்டி திருடியதை ஒப்புக்கொண்டார். அதன்படி, சுருட்டிய அனைத்து பொருட்களையும், போலீசார் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X