களரம்பட்டி மக்கள் இடையே கழிவுநீர் செல்வதில் களேபரம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: கழிவுநீர் செல்வதில், பேரூராட்சி, ஊராட்சி எல்லை பிரச்னை ஏற்படுவதால், ஒரே கிராம மக்கள், அடிக்கடி மோதிக்கொள்கின்றனர்.
பனமரத்துப்பட்டி அருகே, களரம்பட்டியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில், பாதி வீடு பள்ளித்தெருப்பட்டி ஊராட்சியிலும், மீதி வீடுகள், பனமரத்துப்பட்டி பேரூராட்சி, 11வது வார்டிலும் உள்ளன. சாக்கடை கால்வாய், ஊராட்சி எல்லையிலிருந்து, பேரூராட்சி எல்லை வழியாக செல்கிறது. ஊராட்சியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், பேரூராட்சி எல்லையிலுள்ள கால்வாயில் தேங்கி நிற்கிறது. அதனால், பேரூராட்சி எல்லையில், ஒரு தரப்பினர் கால்வாயில் கல் வைத்து, கழிவுநீரை தடுக்கின்றனர். இதனால், மக்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: ஊராட்சியில் கால்வாயை சுத்தம் செய்வதால், பேரூராட்சி பகுதிக்கு கழிவுநீர் சென்று, சிறுபாலத்தின் அடியில் தேங்கிவிடுகிறது. ஊராட்சி பணியாளர், பேரூராட்சி எல்லையிலுள்ள சிறுபாலத்தை சுத்தம் செய்ய மறுக்கின்றனர். பேரூராட்சி அதிகாரிகள், 11வது வார்டிலுள்ள களரம் பட்டியை கண்டுகொள்வதில்லை. குப்பை அள்ள, சாக்கடை சுத்தம் செய்ய, பணியாளர்கள் வருவதில்லை. குடிநீரும் வருவதில்லை. கடைகோடியிலுள்ள களரம்பட்டியை, பேரூராட்சி அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர். அவர்கள், 11வது வார்டு களரம்பட்டியில், தூய்மை பணி மேற்கொள்ள, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X