மின்கம்பத்தை தாங்கும் கம்பியால் இரவில் ஏற்படும் வாகன விபத்து

Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மேட்டூர்: மின்கம்பத்தை தாங்கும் கம்பியால், இரவில், வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர்.
மேட்டூர், மேற்கு பிரதான சாலையிலிருந்து மருத்துவமனை குடியிருப்பு, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை, சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. அதில், வனச்சரக அலுவலகம் அருகே, சாலையோரம் மின்கம்பம் உள்ளது. அந்த கம்பத்தை தாங்க, பொருத்தப்பட்ட கம்பி, தார்ச்சாலையில் பதிக்கப்பட்டுள்ளது. இரவில், அப்பகுதியில் மின்விளக்குகள் எரிந்தாலும் கூட, கம்பி சாலை அடிவாரம் பதித்துள்ளது, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை. இதனால், கம்பியில் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைகின்றனர். அதை தடுக்க, கம்பியில் சிவப்பு துணி கட்டியபோதும், விபத்து தொடர்கிறது. அதனால், சாய்வாக காணப்படும் மின் கம்பத்தை சீரமைத்து, தாங்கும் கம்பியை, சாலையோரம் மாற்ற, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கவிஞன், மட்டகளப்பை,இலங்கை இந்த ஸ்டே வயர்கள் இரவில் மட்டும் அல்ல பகலிலும் வாகன ஓட்டிகளுக்கு சரியாக பார்வையில் படுவதில்லை. அதனால் விபத்து ஏற்பட்டது சிலருக்கு கை முழுவதும் துண்டு ஆகி உள்ளது. மிகவும் வேதனை. இதற்கு காரணம் மினதுறை. புகார் அளித்தும் அவர்கள் அதனை சரி செய்ய முயற்சி செய்வது இல்லை. அதிகாரிகளின் அலட்சியம் எளியவர்களுக்கு எமனாகி விடுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X