வீடுகளிலேயே இருங்கள்: தமிழில் எச்சரிக்கை விடுத்த மலேஷிய போலீஸ்

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
மலேஷியா, போலீஸ், தமிழ், கொரோனா, கொரோனாவைரஸ், corono, coronavirus,malaysia, police

கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் யாரும் வீட்டை விட்டு வரக்கூடாது என பொது மக்களுக்கு போலீசார் தமிழில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மலேஷியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டு மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது. இதனையடுத்து பொது மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் பல தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் மொகிதின் யாசின் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். இதன் முடிவில் கடந்த திங்கட்கிழமை அன்று டிவி மூலம் உரையாற்றிய அவர், கொரோனா தொற்றை தடுக்கநாடு முழுவதும் பொது மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.


latest tamil news
இதனையடுத்து, போலீசார் பல்வேறு இடங்களில் பொது மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மைக் மூலம் எச்சரித்து வருகின்றனர். தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்ற போலீசார், மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி தமிழில் கூறினர். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் போலீசார் கூறியுள்ளதாவது:வணக்கம், பொது மக்களின் கவனத்திற்கு... நச்சுறுதி தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் பொது மக்கள் அனைவரும் தத்தம் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இச்சட்டம் மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை அமலில் இருக்கும். சட்டத்தை பின்பற்றதவறினால், பின்வரும் சட்டப்பிரிவு 7 ன் கீழ் தண்டிக்கப்படுவீர்கள். ஆயிரம் ரிங்கிட் அபராதம். அல்லது 6 மாதம் சிறை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும். பொது மக்கள் தத்தமது வீடுகளிலேயே இருப்பது சாலச்சிறந்தது. நன்றி. இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-மார்-202016:21:58 IST Report Abuse
Lion Drsekar இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் , குறிப்பாக நம் நாட்டை தவிர அனைவருமே அறிந்த மொழிகள் தாய்மொழி , ஹிந்தி ஆங்கிலம், மற்றும் இரண்டு அண்டைமாநில மற்றும் உலக மொழிகள், இங்கு தமிழ் மொழியே ஒரு குடும்பத்துக்கு சொந்தமாகிப்போனது, அவர்கள் மட்டுமே இந்த தமிழை உலகுக்கு கொடுத்தார் போன்று சரித்திரத்தில் இடம் பெற்றும் விட்டார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சங்ககாலப் புலவர்கள், சரித்திரம் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டது, எனவே இங்கு இருப்பவர்கள் மாற்று மொழிகளில் மக்களுக்கு பிரச்சாரம் செய்ய முடியாத ஒரு நிலை, வந்தே மாதரம்
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
22-மார்-202018:03:35 IST Report Abuse
dandyபரிதாபம் டாஸ்மாக் நாட்டில் எதனை பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றார்கள் ???? எல்லா உயர் அரசு அதிகாரிகளுக்கு தெலுங்கன் ..மலையாளி ..கன்னடன் தமிழில் அறிக்கை கொடுக்க இவர்களுக்கு பைத்தியமா ....கட்டுமரம் குடி மக்களுக்கு தந்த பரிசு...
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-மார்-202015:50:00 IST Report Abuse
ஆரூர் ரங் சீனாக்காரனின் கிருமி போஜனமே உலகத்தின் திடீர் பிரச்னைக்குக் காரணம்
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
22-மார்-202019:54:38 IST Report Abuse
Sanny அதை நீ எதுக்கு தின்றாய்....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-மார்-202015:33:31 IST Report Abuse
Endrum Indian இங்கு கொல்கத்தாவில் இன்று நான் பார்த்தது இந்த ஊரடங்கில் கூட இங்கு 1 நிமிடத்திற்கு ஒரு சைக்கிள், ஒரு மோட்டார் பைக் செல்கின்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X