பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : மார் 22, 2020
Share
Advertisement

சேவை மையம் இருந்தும் வீண்: தர்மபுரி அடுத்த குப்பூரில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், சேவை மையம் கட்டப்பட்டது. இதில், பட்டா, சிட்டா வழங்குதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், ஆதார்கார்டில் திருத்தம், வருமானம், ஜாதி இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை, பொதுமக்கள் எளிதில் பெற கட்டப்பட்டது. இன்று வரை, திறக்கப்படாமல் உள்ளதால், சேவைகளை பெற, இப்பகுதி மக்கள் தர்மபுரி தாலுகா அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர்.
கிடப்பில் சாலை பணி பொதுமக்கள் அவதி: தர்மபுரி அடுத்த, டொக்குபோதனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வெள்ளக்கல் ஜருகு பிரிவு சாலையில் இருந்து, வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வரை, தார்ச்சாலை அமைக்கும் பணி, ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்டது. இதில், ஜல்லி கற்கள் மற்றும் மண் கொட்டி பரப்பப்பட்டது. ஆனால், பணி தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், அவதிப்படுகின்றனர்.

காட்சி பொருளான சேவை மையம்: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, அ.புதுப்பட்டி பஞ்.,ல், பட்டா, சிட்டா, ஜாதிச்சான்று, அ.பதிவேடு உள்ளிட்ட சான்றுகளை பொதுமக்களும், விவசாயிகளும் எளிதாக பெறும் வகையில், 13.12 லட்சம் ரூபாய் மதிப்பில், கிராம சேவை மையக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும், திறக்கப்படாமல் உள்ளதால் சான்றுகள் பெறுவதற்கு, மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி செல்கின்றனர். எனவே, சேவை மையக் கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

ஜல்லி பெயர்ந்த சாலையால் அவஸ்தை: தர்மபுரி அடுத்த, பள்ளிப்பட்டியில் இருந்து ஆடல்பட்டி வரை, 3 கி.மீ., தூரத்துக்கு தார்ச்சாலை உள்ளது. இதில், பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். சீரமைக்க வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X