கிடப்பில் போடப்பட்டுள்ள தார்ச்சாலை அமைக்கும் பணி

Added : மார் 22, 2020
Share
Advertisement

தர்மபுரி: கிடப்பில் போடப்பட்டுள்ள தார்ச்சாலை அமைக்கும் பணியால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்டது வி.ஜெட்டிஹள்ளி. இங்கு ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தார்ச்சாலை சேதமடைந்ததால், கடந்த, 10 மாதங்களுக்கு முன், 1 லட்ச ரூபாய் மதிப்பில் இச்சாலை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால், இப்பணியை துவங்க, டெண்டர் எடுத்தவர்கள் பணியை கிடப்பில் போட்டதால், இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகில் இருந்து, வி.ஜெட்டிஹள்ளிக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த, இரு மாதங்களுக்கு முன் துவங்கியது. செம்மண் சாலை அமைத்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேல், தார்ச்சாலை அமைக்காமல் உள்ளதால், இவ்வழியாக வாகனங்களில் வந்து செல்பவர்கள் மட்டுமின்றி, சாலையோரம் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருபவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். கிடப்பில் போடப்பட்டுள்ள தார்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X