பராமரிப்பின்றி பாலக்கோடு தக்காளி மார்க்கெட் கழிவறை

Added : மார் 22, 2020
Share
Advertisement

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் உள்ள பொதுக்கழிப்பறையை, முறையாக பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு, நாள்தோறும், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள் மற்றும் தக்காளியை, விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவற்றை வாங்க, உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, ஓசூர், சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகின்றனர். பெங்களூருவில் இருந்து வரும் வியாபாரிகள், இரவு முழுவதும் காத்திருந்து, காலையில் தக்காளியை வாங்கிச்செல்கின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக, பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த மார்க்கெட்டில் பொதுக்கழிவறை கட்டியது. இந்நிலையில், தற்போது பராமரிப்பின்றி இந்த பொதுக்கழிவறை உள்ளது. இதிலிருந்து கழிவுநீர் வெளியேறும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல நாட்களாக கழிவுநீர் தேங்கி, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி, இதை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X